கொரோனா அச்சுறுத்தல் தொடர்ந்து அதிகரிப்பதால் ஊரடங்கு மே, 17 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது

கொரோனா அச்சுறுத்தல் தொடர்ந்து அதிகரிப்பதால் ஊரடங்கு மே, 17 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால், நீதிமன்ற வழக்கமான பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கோவை மாவட்டத்திலுள்ள நீதிமன்றங்களில், மே,4 முதல் மே,17 வரை, ஏற்கனவே வாய்தா போடப் பட்ட வழக்குகள் அனைத்தும் வேறு தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஜாமின் மனுக்கள் மீது வழக்கம்போல, ஆன்லைன் வாயிலாக உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இதற்காக நீதிமன்ற ஊழியர்கள் 'ஷிப்ட்' முறையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.